வட அமெரிக்கா மெக்சிகோவில் நடைபெறவிருந்த ஜனாதிபதி வேட்பாளர் பிரச்சார கூட்டத்தில், மேடை சரிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அந்நாட்டின் வடக்கு மாகாணமான, நியூவோ லியோன்  மாநிலத்தில், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ்  தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்று வீசிய பலத்த காற்று காரணமாக இவ்வாறு மேடை சரிந்து விழுந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. மெக்சிகோவில் எதிர்வரும் ஜூன் 2 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அங்கு விறுவிறுப்பாக பிரச்சார கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையிலேயே, குடிமக்கள் இயக்கம் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் பிரச்சார நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடை அமைப்புகள் சரிந்து விழுந்துள்ளன.

இந்தில் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இது தொடர்பாக வேட்பாளர் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இந்த விபத்தில் படுகாயமடைந்தவர்கள் உள்ளூர் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதாகவும், விபத்தில் தனது குழு உறுப்பினர்களும் படுகாயமடைந்துள்ளதாகவும்தெரிவித்துள்ளார்.

மெக்சிகோ ஜனாதிபதித் தேர்தல் போட்டியில் ஜார்ஜ் அல்வாரெஸ் மைனெஸ் தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளார்.

ஆளும் கட்சி வேட்பாளர் கிளாடியா ஷீன்பாம், எதிர்க்கட்சி கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் சோச்சிட்ல் கால்வேஸ் ஆகியோர் முறையே, போட்டியில் முதல் இரண்டு இடங்களை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.