Dunedin பேருந்து நிறுத்தத்தில் 16 வயது இளைஞனைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 13 வயது சிறுவன் Dunedin இளைஞர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Trinity Catholic கல்லூரி மாணவரான குறித்த 16 வயது இளைஞன் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்குப் பின்னர் கிரேட் கிங் ஸ்ட்ரீட்டில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் தாக்கப்பட்டார். பலத்த காயமடைந்த அவர் Dunedin மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் அங்கு ஒரு கத்தியை கண்டுபிடித்து 13 வயது சிறுவனை கைது செய்தனர்.
இந்நிலையில் குறித்த சிறுவன் இன்று, நீதிபதி மைக்கேல் டர்னர் முன் ஆஜரானார், இதனையடுத்து நீதிபதி இந்த வழக்கை ஜூன் 11 அன்று Dunedin உயர் நீதிமன்றத்திற்கு மாற்றினார்.
இந்நிலையில் துப்பறியும் மூத்த சார்ஜென்ட் கல்லும் க்ரூடிஸ் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பில் புகைப்படங்கள் அல்லது வீடியோ காட்சிகள் உள்ள எவரும் காவல்துறையை தொடர்புகொள்ளுமாறு தெரிவித்தார்.
செய்தி நிருபர் - புகழ்