ஆக்லாந்தில் 50க்கும் மேற்பட்ட சாக்லேட் பார்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நகரில் உள்ள ஒரு கடையில் திருடப்பட்ட சாக்லேட் விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் டேவ் கிறிஸ்டோபர்சன் கூறுகையில், புதன்கிழமை இரவு அந்த நபரை, பணியில் இல்லாத அதிகாரி ஒருவர் அடையாளம் கண்டுகொண்டார்.

பின்னர் அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்றனர், மேலும் அவர் கைது செய்யப்பட்டு குற்றம் சாட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

38 வயதான அந்த நபர் இன்று ஆக்லாந்து மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

திருடப்படும் பொருட்கள் எங்கு விநியோகிக்கப்படுகின்றன என்பதையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எனவே திருடப்பட்ட பொருட்களை வாங்கவோ அல்லது விற்கவோ அணுகுபவர்கள் தொடர்பில் காவல்துறைக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்