Coromandel இல் இன்று காலை நாய்கள் கூட்டம் தாக்கியதில் பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் வைகாடோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அந்த பெண் தற்போது சீரான நிலையில் இருப்பதாக Health New Zealand கூறியது.

Westpac Rescue ஹெலிகாப்டருக்கான ஏர் க்ரூ அதிகாரி சைமன் தோர்ப், Tairua என்ற இடத்தில் அந்தப் பெண் நான்கு நாய்களால் தாக்கப்பட்டதாகக் கூறினார். காலை 7.49 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்