விடுதலைப் புலிகளிற்கு வெளிநாடுகளில் நிதி சேகரிப்பவர்களை இனம்கண்டு அவர்கள் மீது நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

 

இதற்காக இன்டர்போல் மற்றும் சி.ஐ.டி. மற்றும் புலனாய்வு பிரிவினரின் உதவிகளை பெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

 

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், வெளிநாடுகளில் விடுதலைப் புலிகளிற்கு பலர் நிதி சேகரிக்கின்றனர் என்றும் இது சட்டவிரோதமானது என்பதால் நாங்கள் இன்டர்போலின் உதவியை நாடவுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

முன்னைய அரசாங்கம் இவர்கள் குறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதனால் இந்த வலையமைப்பு விரிவடைந்துள்ளது எனவும் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.