இயக்குநர் விக்னேஷ் சிவனும் லேடி சூப்பர் நயன்தாராவும் பல வருடங்களாக காதலித்து வருவகின்றனர். இருவருக்கும் எப்போது திருமணம் நடக்கும் என்பது தான் கோலிவுட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இன்ஸ்டாகிராம் போஸ்ட் இருவருக்கும் ரகசியமாக திருமணம் ஆகி விட்டதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.