தொழிலதிபர் லெஜண்ட் சரவணன்  ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கும் படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். 

ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பும், லெஜண்ட் சரவணன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஒரே இடத்தில் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் ரஜினிகாந்தை லெஜண்ட் சரவணன் சந்தித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.