டெல்லி: 67-வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. இந்த வருடத்திற்கான சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

 

* நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் படத்துக்கு சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது அறிவிப்பு

 

* நடிகர் பார்த்திபன் இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்துக்கு ஜூரி விருது அறிவிப்பு

 

* சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷூக்கு அறிவிப்பு

 

* சிறந்த நடிகருக்கான விருதை ஹிந்தி நடிகர் மனோஜ் பாஜ்பாய் உடன் தனுஷ் பகிர்ந்து கொள்கிறார். 

 

* சூப்பர் டீலக்ஸ் திரைப்படத்தில் நடித்த விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிப்பு

 

* விஸ்வாசம் படத்துக்காக சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது இசையமைப்பாளர் டி. இமானுக்கு அறிவிப்பு

 

* ஒத்த செருப்பு திரைப்படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவாளர் விருது அறிவிப்பு

 

* சிறந்த இந்தி தரைப்படத்துக்கான விருது மறைந்த சுஷாந்த் நடித்த சிச்சுசோரேவுக்கு அறிவிப்பு