தமிழ்த் திரையுலகில் நடிகராக வலம் வந்தவர் கார்த்தி என்கிற தீப்பெட்டி கணேசன். இவர் ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். 'ரேணிகுண்டா', 'பில்லா 2', 'கண்ணே கலைமானே' உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தீப்பெட்டி கணேசன், மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் தீப்பெட்டி கணேசன் இன்று காலமானார்.