சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் மூன்றாவது திரைப்படம் லால் சலாம். இந்த திரைப்படம் ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமா படமாகும். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

கிரிக்கெட்டை மையப்படுத்திய கதையான இந்த படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் லீட் ரோலில் நடித்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தின் பாய் என்னும் கேமியோ ரோலிலும், ரிட்டையர்ட் கிரிக்கெட்டர் கப்பில் தேவ் அவரது கதாபாத்திரத்திலேயே ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் மற்றும் கப்பில் தேவ் இருவரின் கேமியோ கதாபாத்திரம் அதிகமான எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது. கிரிக்கெட் வீரர் கப்பில் தேவின் ரசிகர்கள் அவரை பெரிய திரையில் நடிகராக பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக காத்திருக்கிறார்கள். கேமியோவாக இருந்தாலும் மெயின் ரோலாக இருந்தாலும் தலைவர் நடிக்கிறார் தலைவர் ஸ்கிரீனில் இருக்கிறார் என்றால் அந்த படத்திற்கான வரவேற்பு கண்டிப்பாக அதிகமாக தான் இருக்கும்.

கிரிக்கெட்டை மையப்படுத்திய லால் சலாம் படத்தின் டீசர் கடந்த நவம்பர் 12ஆம் திகதி வெளியானது. இந்த படம் வரும் பொங்கலுக்கு ரிலீசாகும் என கூறப்பட்டிருந்தது. லால் சலாம் படத்தின் ரிலீஸை உறுதிப்படுத்தும் விதமாக, நேற்று இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு போஸ்டரும் வெளியானது. இந்த அறிவிப்பு போஸ்டர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மத்தியிலும் கப்பில் தேவ் ரசிகர்கள் மத்தியிலும் லால் சலாம் படத்தின் ரசிகர்கள் மத்தியிலும் பயங்கரமான வைபை ஏற்படுத்தியது.

இந்நிலையில் லால் சலாம் படத்தின் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜனிகாந்த் பதிவிட்டு இருக்கும் பதிவு சோசியல் மீடியாவில் மிரட்டலாக பரவிவருகிறது. அந்த பதிவில், "கப்பில் தேவ் அவரது கதாபாத்திரத்திற்கான டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அவருடன் பணியாற்றியது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது. உண்மையான வசீகரன் நீங்கள் தான் கேப்டன். லால் சலாம் படத்தின் போஸ்ட் ப்ரோடுக்ஷன் வேலைகள் முழு மூச்சில் நடக்கிறது. #பொங்கல் 2024" என ஐஸ்வர்யா கேப்ஷன் போட்டிருக்கிறார்.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடைந்து அடுத்ததாக பிரமோஷனல்பணிகளில்  ஈடுபடவிருக்கும் லால் சலாம் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகி கொண்டிருக்கிறது. லால் சலாம் திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.