இயக்குநர் ஷங்கர் அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2005ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான படம் அந்நியன். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானது. இதில் விக்ரம் அம்பி, ரெமோ, அந்நியன் ஆகிய கேரக்டர்களில் நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக சதா நடித்திருந்தார். மேலும் விவேக், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலரும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.