பிக் பாஸ் 7 வீட்டில் இருக்கும் 14 பேர் பத்திரமாக இருக்க வேண்டும் என்றால் பூகம்ப டாஸ்க்கில் வெற்றி பெற வேண்டும். இல்லை என்றால் வீட்டில் இருக்கும் 3 பேரை வெளியேற்றிவிட்டு 3 ஒயில் கார்டு போட்டியாளர்களை அழைத்து வந்துவிடுவார் பிக் பாஸ்.

அது தான் பூகம்ப டாஸ்க். பூகம்பம் பூகம்பம்னு பிக் பாஸ் அடிக்கடி சொல்கிறார். ஆனால் பூகம்ப டாஸ்குகள் எல்லாம் பந்தை அடிப்படையாக வைத்து வருவதாக உள்ளது பார்வையாளர்களை அதிருப்தி அடைய செய்துள்ளது.

இருந்தாலும் இவ்வளவு கஷ்டமான டாஸ்க் எல்லாம் கொடுக்கக் கூடாது பிக் பாஸ். என்னய்யா இது, சின்னப்புள்ளத்தனமான டாஸ்காக இருக்கிறது என்கிறார்கள் பார்வையாளர்கள்.

இந்நிலையில் இன்றும் பந்தை வைத்து புது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ப்ரொமோ வீடியோவை பார்த்தவர்கள் கடுப்பாகிவிட்டார்கள்.

கிராமத்தில் நடக்கும் விளையாட்டுகளை காப்பியடித்து டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. கிரியேட்டிவ் டீம் உங்களை ஏமாற்றுகிறது பிக் பாஸ். சூதானமாக இருங்க. இல்லைனா ஒரு வார்த்தை மட்டும் சொல்லுங்கள், நாங்கள் வந்து பந்து இல்லாமல் புதுப்புது டாஸ்க்குகளை உங்களுக்கு சொல்கிறோம் என பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

டாஸ்குகள் எல்லாம் கடினமாக இல்லை. இதை போய் பூகம்பம்னு சொன்னால் பூகம்பமே சிரித்துவிடும் பிக் பாஸ் என சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.