Manawatū மாவட்டத்தில் Sanson அருகே இரண்டு வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளாகி உள்ளன.

இதனையடுத்து அடுத்து‌‌ மாநில நெடுஞ்சாலை 1 இன் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஒருவர் ஆபத்தான நிலையில் Palmerston North மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Waka Kotahi, மக்கள் அப்பகுதியை தவிர்க்கவும் அல்லது மாற்றுப்பாதையை பயன்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்