கடந்த வாரம் Nelson பகுதியில் ஆண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாகக் கருதப்படும் வாகனம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

நவம்பர் 10 அன்று Stoke இல் நடந்த ஒரு தாக்குதல் சம்பவத்தில்
48 வயதான ஜேம்ஸ் விட்டிகாவ் பார்டன் என்ற நபர் உயிரிழந்தார்

இரவு 7 மணியளவில் Orchard தெருவில் உள்ள ஒரு வீட்டில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு பார்டன் பலத்த காயங்களுடன் காணப்பட்ட நிலையில் அவரை மீட்டு பொலிஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து கொலை விசாரணை தொடங்கப்பட்டது.

இந்நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய வெள்ளை நிற BMW காரை இன்று கண்டுபிடித்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொதுமக்கள் எங்களுக்கு வழங்கிய தகவல்களுக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என்று டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் லெக்ஸ் புரூனிங் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்நிலையில் நவம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை BMW693 பதிவு செய்யப்பட்ட இந்த வெள்ளை BMW X5 ஸ்டேஷன் வேகனைப் பார்த்தவர்கள் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் தெரிவித்தார்.

தகவல் தெரிந்தவர்கள், காவல்துறையை 105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்