நியூசிலாந்து பொது தேர்தலை நடத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு செப்டம்பர் 10 அன்று கவர்னர் ஜெனரலால் பிறப்பிக்கப்பட்ட ரிட் படிவம் கவர்னர் ஜெனரலுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

ரிட் படிவம் திருப்பி அனுப்பப்பட்டதுடன் நியூசிலாந்தின் பொது தேர்தல் நடைமுறை அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெற்றி பெற்ற வேட்பாளர்களின் பட்டியல் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ரிட் படிவம் கவர்னர் ஜெனரலுக்கு திருப்பி அனுப்பப்பட்டு ஆறு வாரங்களுக்குள் பாராளுமன்றம் திறக்கப்பட வேண்டும்.

சட்டசபை கிளார்க் டேவிட் வில்சன், பாராளுமன்ற திறப்புக்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும், திகதிகள் கிடைக்கும்போது வெளியிடப்படும் என்றும் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்