Northland இல் இன்று பிற்பகல் நாய் தாக்கியதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதியம் 1 மணியளவில் Mangawhai என்ற இடத்தில் உள்ள Tara சாலையில் நபர் தாக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். மற்றும் விலங்கு கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தொடர்பு கொள்ளப்பட்டுள்ளதாக‌ பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்