தெற்கு ஆக்லாந்தின் Pukekohe நகரில் கொள்ளையில் ஈடுபட்ட ஏழு வாலிபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

12 முதல் 18 வயதுடைய ஆறு இளைஞர்கள், முகமூடி அணிந்த நிலையில் திங்கள்கிழமை காலை West தெருவில் உள்ள ஒரு வணிக நிலையத்தில் நுழைந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

அவர்களில் இருவர் ஆயுதம் ஏந்தி இருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் வணிக உரிமையாளர் உள்ளே இருந்தார்.‌குற்றவாளிகள் புகையிலை பொருட்களை எடுத்துக் கொண்டு, பின்னர் அருகிலுள்ள ஒரு முகவரிக்கு சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏழாவது நபர் ஒரு திருடப்பட்ட வாகனத்தில் கொள்ளையர்களை அங்கிருந்து அழைத்துச் சென்றார்.

பின்னர் திருடப்பட்ட பெரும்பாலான பொருட்களுடன் அந்த வாகனம் மீட்கப்பட்டது என்று இன்ஸ்பெக்டர் ஜோ ஹண்டர் கூறினார்.

அந்த நேரத்தில் அருகில் இருந்த பலர் "கொள்ளையை அவதானித்து பொலிஸைத் தொடர்பு கொண்டு, பல தகவல்களை வழங்கினர்.

இது ஏழு குற்றவாளிகளையும் கைது செய்ய வழிவகுத்தது என அவர் தெரிவித்தார்.

நியூசிலாந்தின் நீதி அமைப்பு 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்களை வயது வந்தவராகவும், 17 வயது அல்லது அதற்குக் குறைவானவர்களை மைனராகவும் கருதுகிறது.

இருப்பினும் 17 வயதுக்குட்பட்டவர்கள் கடுமையான குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டால் வயது வந்தோர் நீதி அமைப்பின் வழியாக விசாரணை மேற்கொள்ளப்படலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

செய்தி நிருபர் - புகழ்