Lower Hutt இல் Ruthless-Empire என்ற பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த குழந்தை வசித்த வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளைப் பதிவு செய்யப் பயன்படுத்தப்படும் ஹார்ட் டிரைவைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர்.

பேபி ரூ என அழைக்கப்படும் இந்த குழந்தை கடந்த அக்டோபர் மாதம் 22 ஆம் திகதி அசைவின்றி கிடந்த நிலையில் ஹட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இதனையடுத்து குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் தற்போது பொலிஸார் ஒரு  ஹார்ட் டிரைவ்வை தேடி வருகின்றனர்.

ஒரு அறிக்கையில், டிடெக்டிவ் இன்ஸ்பெக்டர் நிக் ப்ரிட்சார்ட், அந்த ஹார்ட் டிரைவ் Provision-ISR NVR5-8200PX+ DVR முத்திரை கொண்டது என்று கூறினார்.

இதனிடையே TE6972 பதிவைக் கொண்ட வெளிர் நிற நிசான் சென்ட்ரா வாகனம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

அக்டோபர் 22 ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அக்டோபர் 24 செவ்வாய் மதியம் வரை அந்த வாகனத்தை பார்த்தவர்களிடம் இருந்து பொலிஸார் தகவல்களை முறையிடுகின்றனர்.

இந்நிலையில் ஹார்ட் டிரைவ் அல்லது வாகனம் பற்றிய தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

செய்தி நிருபர் - புகழ்