சுமார் இரண்டு கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் போதைப்பொருளை நியூசிலாந்திற்குள் கொண்டு வர முயன்றதாகக் கூறப்படும் 19 வயது அயர்லாந்து இளைஞர் ஒருவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

சனிக்கிழமையன்று ஆக்லாந்து விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் அவரது பையை சோதனை செய்த பின்னர், ஐந்து அட்டைப் பெட்டிகளின் லைனிங்கில் 1.9 கிலோகிராம் மெத்தம்பேட்டமைன் இருப்பதைக் கண்டுபிடித்ததாக ஆக்லாந்து விமான நிலைய சுங்க மேலாளர் பால் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

இந்த 1.9 கிலோ மெத்தம்பேட்டமைனில் இருந்து 95,500 டோஸ்கள் உருவாக்கப்பட்டிருக்கலாம் எனவும் இதன் தெரு மதிப்பு 669,000 டொலர்கள் எனவும் சுங்கம் மதிப்பிடப்பட்டுள்ளது.

போதைப்பொருள் மூலம் நமது சமூகங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கும் குற்றவாளிகளின் முயற்சிகளைத் தடுக்க சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புடன் இருப்பதாகவும், போதைப்பொருட்களை இடைமறித்து கைப்பற்றுவது திருப்திகரமாக இருப்பதாகவும் வில்லியம்ஸ் கூறினார்.

இந்நிலையில் கைது செய்யப்பட்ட அயர்லாந்து இளைஞன் இன்று Manukau மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

செய்தி நிருபர் - புகழ்