ஆக்லாந்து மற்றும் Waiheke Island இற்கு இடையே ஒரு புதிய படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Island Direct நிறுவனத்தின் 50 இருக்கைகள் கொண்ட இந்த  பயணிகள் படகு, Te Waipiki, ஆக்லாந்தின் Downtown Ferry Terminal மற்றும் Waiheke's Matiatia Wharf இடையே ஒரு நாளைக்கு 18 பயணங்கள் வரை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய படகு சேவையின் நிறுவனர் டேவிட் டோட், தான் காலை வேளையில் படகில் பயணித்து, பயணிகளிடம் பேசி சில கருத்துக்களைப் பெற்றதாக கூறினார்.

டோட் ஒரு வழி டிக்கெட்டின் விலை 27.50 டொலர் எனவும் ரிட்டர்ன் டிக்கெட் விலை 50 டொலர் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் அடுத்த இரண்டு வாரங்களில் மல்டி-பாஸ் முறையை அறிமுகப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.