இந்தோனேசியா தீவு பகுதிகளில் கடந்த சில நாட்களில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்க அடுத்தடுத்து ஏற்பட்டு வருகிறது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணம் டூயல் கடற்கரை நகரில் ரிக்டரில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இதனைத் தொடர்ந்து அதே பகுதியில் ரிக்டரில் 7.0 அலகாக மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. 3-வதாக ரிக்டரில் 5.1 அலகு ரிக்டரும் பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் நேற்று பண்டா கடற்பரப்பில் மற்றொரு அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டரில் 7.2 அலகுகளாக பதிவாகி இருந்தது. ஆனால் இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சுனாம் எச்சரிக்கை எதுவும் விடுவிக்கப்படவில்லை.