Hawke's Bay இல் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, சாலைகள் மற்றும் ஒரு பள்ளி மூடப்பட்டன.

மேலும் மூன்று வீடுகளில் இருந்த குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

மாநில நெடுஞ்சாலை 2ல் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு வாகன ஓட்டுநர்களும்‌ மீட்கப்பட்டனர்.

இதனிடையே மாநில நெடுஞ்சாலை 2 Whirinaki மற்றும் Gisborne இடையே மூடப்பட்டது, இன்று அது மீண்டும் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாலைப் பணியாளர்கள் வெள்ளத்தால் ஏற்பட்ட மண்சரிவுகள், குப்பைகள் மற்றும் விழுந்த மரங்களை இரவோடு இரவாக அகற்றினர்.

SH38 Wairoa முதல் Waikaremoana வரை மூடப்பட்டது, ஆனால் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

Hawke's Bay மற்றும் Tai Rāwhiti க்கான Waka Kotahi அமைப்பு மேலாளர், Martin Colditz, சாலையை பயன்படுத்துபவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.

இன்று வடக்கில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில பகுதிகளில் தொடர்ச்சியாக ஐந்து மணிநேரம் ஒரு மணி நேரத்திற்கு 15 முதல் 30 மிமீ வரை மழை பெய்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில் மரங்கள் விழுந்து சாலைகளில் ஆபத்தை ஏற்படுத்துவதாக Hawke's Bay சிவில் டிஃபென்ஸ் தெரிவித்துள்ளது.

முடிந்தால் பயணத்தை தாமதப்படுத்துமாறு சாரதிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Wairoa மாவட்ட மேயர் Craig Little கூறுகையில், Wairoa ஆற்றின் நீர்மட்டம் அதிகமாக உள்ளது ஆனால் அது அதன் கரையை மீறவில்லை.

உள்ளூர்வாசிகள் புதன்கிழமை எங்கும் செல்லத் திட்டமிட வேண்டாம் என்றும், Wairoa மாவட்ட கவுன்சில் வலைத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலமும், வானொலியில் புதுப்பிப்புகளைக் கேட்பதன் மூலமும் புதுப்பித்த நிலையில் இருக்க வேண்டும் என்று லிட்டில் கூறினார்.

Wairoa மாவட்டத்திற்கு காலை 7 மணி வரை MetService ஆரஞ்சு கனமழை எச்சரிக்கை விடுத்தது.

அதே நேரத்தில் Tokomaru Bay இன் தெற்கே Tai Rāiwhiti/Gisborne காலை 8 மணி வரை கனமழை பெய்தது.

செய்தி நிருபர் - புகழ்