இந்தியா: தமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் 57-வது பிறந்த நாள் இன்று உற்சாகமாகவும் வெகு விமரிசையாகவும் நாம் தமிழர் கட்சியினரால் கொண்டாடப்படுகிறது.

இன்றைய பிறந்த நாளின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இதேபோல நடிகர் விஜய்யும் சீமானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார் என நாம் தமிழர் கட்சியின் மூத்த நிர்வாகி பாக்கியராசன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

ஏற்கனவே சீமான், விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்கக் கூடும் என்கிற ஆரூடங்கள் இருக்கின்ற நிலையில் விஜய் தற்போது சீமானுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்ததை சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாற்றி வருகின்றனர் நாம் தமிழர் தம்பிகள் என்பது குறிப்பிடத்தக்கது.