இந்தியா: தமிழ்நாடு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலின் போது அருந்ததியரை ஆந்திரா வந்தேறிகள் என விமர்சனம் செய்த வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் ஆஜரானார்.

இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சீமானிடம், திமுக அமைப்புச் செயலாளரும், முன்னாள் எம்.பியுமான ஆர்.எஸ்.பாரதி, நாய்கறி பற்றி பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த சீமான் கூறுகையில்...

"உணவு, உடை, வழிபாடு என்பது அவரவர் உரிமை. நான் நாயை தின்பேன், பேயை தின்பேன், அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? நாகாலாந்து மக்கள்தான் நாய் தின்கின்றனரா? சீனாவில் சாப்பிடவில்லையா? மற்ற நாடுகளில் சாப்படவில்லையா? உணவு என்பது என் உரிமை.

அகோரிகள் உயிருள்ள எதனையும் சாப்பிடக் கூடாது என்பவர்கள். காய்கறிகளை கூட சாப்பிடுவது இல்லை தெரியும் தானே? இறந்த மனித உடல் வெந்து கொண்டிருக்கும் போது அதை எடுத்து ரொட்டியில் வைத்து சாப்பிடுகின்றனர். அதை என்ன செய்வது? அந்த அகோரிகளை எல்லாம் உள்ளே போடுவீங்களா? அதை கேவலம் என பேசுவீங்களா? நான் கூட நாய் போனா, நாகாலாந்து பிரியாணி போகுது விடுடா என்பேன்.

நாகாலாந்தில் இருப்பவன் என் உறவினர்தான். நாங்கள் நாகர்கள்தானே. நாகாலாந்துன்னு பெயர் எப்படி வந்தது? மண்ணின் பூர்வகுடிகள். அவன் விருப்பம், அவன் என்னத்தையோ சாப்பிடுவான்" இவ்வாறு சீமான் கூறினார்.