இந்தியா: தமிழ்நாடு

அமைச்சர்கள் செந்தில்பாலாஜி, பொன்முடி ஆகியோர் இல்லங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்திய நிலையில் எ.வ. வேலு வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்துகின்றனர். 

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுகவில் இளைஞரணி, மாணவரணி இருப்பதை போல் பாஜகவில் வருமான வரித்துறை அணி, அமலாக்கத்துறை அணி என சார்பு அணிகள் இருப்பதாக கிண்டல் அடித்துள்ளார்.
 
மேலும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நடைபெறும் வருமான வரி சோதனையை சட்டப்படி எதிர்கொள்வோம் என கேசுவலாக பதிலளித்தார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதால் கடந்த இரண்டு மூன்று மாதங்களாகவே பாஜகவின் சார்பு அணிகளாக செயல்படும் வருமான வரித்துறை அணியும், அமலாக்கத்துறை அணியும் தீவிரமாக செயல்படுகிறது என தனக்கே உரிய பாணியில் விமர்சித்தார் உதயநிதி ஸ்டாலின்.