கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏப்ரல் 2ம் தேதி வெளிவரவுள்ள படம் சுல்தான். இந்த படத்தை ரெமோ படத்தின் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்க, விவேக்-மெர்வின் ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்நிலையில் படத்தின் 2:02 நிமிடங்கள் கொண்ட ட்ரைலர் இந்த வாரம் வெளிவரவுள்ளதாகவும், படத்தின் ட்ரைலர் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இரட்டிக்கும் எனவும் சினிமா வட்டாரங்களிடையில் சொல்லப்படுகிறது.