தொழிலாளர் தின வார இறுதியில் இடம்பெற்ற சாலை விபத்துக்களில் இன்று ஒருவர் உயிரிழந்ததுடன் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

இதன்படி வடமாநில Waipapa நகரில் வாகனம் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 3.35 மணியளவில் Onekura சாலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, ஹமில்டனில் ஒரு வாகனம் விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

அதிகாலை 1.10 மணியளவில் Frankton இல் உள்ள Kells Place இல் இந்த விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு தொழிலாளர் தின வார இறுதியில் 5 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்