இந்தியா: தமிழ்நாடு

பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறுவதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் மாதம் 18ம் தேதி அறிவித்தார். இதனை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்ததை அடுத்து அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர். இந்நிலையில், மேடைக்கு மேடை அதிமுக தலைவர்கள் பாஜகவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சைத்தான் கூட்டணியில் இருந்து நாங்கள் விலகி உங்களை பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எப்போது அந்த கூட்டணியில் இருந்து விலகுவோம் என்று நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். இப்போது கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டோம். இனிமேல் பள்ளிவாசல் தெரு, அரசமரத்து தெரு, ஜமாத் தெருவாக இருந்தாலும் சரி, இனி பாஜக உடன் கூட்டணி இருப்பவர்கள் ஓட்டு கேட்டு வராதே என்று இனி யாரும் சொல்ல மாட்டார்கள் என்று கூறினார்.

இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கள்ளக்கிணறு பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அக்குடும்ப்பதாரை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

இதன்போது திண்டுக்கல் சீனிவாசன் விமர்சனம் தொடர்பாக பேசிய அவர் நாங்கள் சைத்தான்கள் இல்லை குடியானவர்கள், விவசாயிகள், தொழில்துறையினர். நாங்கள் சைத்தான்களை விரட்ட வந்தவர்கள் என்று கூறினார்.