Whanganui மற்றும் Northland இல் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இதன்படி மதியம் 1.30 மணியளவில் Whanganui இல் உள்ள Pākaraka அருகில் Maxwell ஸ்டேஷன் சாலைக்கும் Pukerimu சாலைக்கும் இடையே இரண்டு வாகனங்கள் மோதுண்டு ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனிடையே Northland இல் உள்ள Waipu என்ற இடத்தில் மாநில நெடுஞ்சாலை 1 மற்றும் Shoemaker சாலை சந்திப்பில் பல வாகனங்கள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து மதியம் 1.55 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

செய்தி நிருபர் - புகழ்