நடந்து முடிந்த நியூசிலாந்து பொதுத் தேர்தலில் அபார வெற்றியடைந்து பிரதமராக தேர்வு செய்யப்பட்ட தேசிய கட்சியின் தலைவர் கிறிஸ்டோபர் லக்சன், தனது பிரச்சாரத்தின் போதும், நாடு முழுவதும் ஆற்றிய உரைகளிலும் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக நாட்டு மக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

Auckland Central Business District நடைபெற்ற தனது வெற்றி பேரணியில் உரையாற்றிய அவர் கூறுகையில்...

வாழ்க்கைச் செலவு நெருக்கடியைச் சரிசெய்வோம், ஒவ்வொரு நியூசிலாந்தருக்கும் வரிகளைக் குறைப்போம். நாங்கள் சட்டம் ஒழுங்கு நிலைமையை சரிசெய்து எங்கள் சமூகங்களை பாதுகாப்பாக மாற்றுவோம்.

நாங்கள் சிறந்த சுகாதார அமைப்பை வழங்குவோம் மற்றும் எங்கள் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவோம். நியூசிலாந்து மக்கள் ஒரு மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், எனது அரசாங்கம் அவர்கள் அனைவருக்கும் சேவை செய்யும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் அவருடன் அவரது மனைவி அமண்டா, அவர்களின் மகள் ஒலிவியா மற்றும் மகன் வில்லியம் ஆகியோர் இருந்தனர்.

நியூசிலாந்தின் 42வது பிரதமராக பதவியேற்கவுள்ள தங்கள் தலைவரை உற்சாகப்படுத்த 1500க்கும் மேற்பட்ட தேசிய கட்சி ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் அந்த இடத்தில் கூடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி நிருபர் - புகழ்