நியூசிலாந்து பொது தேர்தல் இன்று தொடங்கி வாக்குப்‌ பதிவுகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வாக்குச் சாவடிகளில் வரிசையில் நிற்பவர்கள் இரவு 7 மணிக்குப் பின்னரும் வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் 2300க்கும் மேற்பட்ட இடங்களில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

ஆனால் மக்கள் பெருமளவில் வாக்களித்து வருவதால், நாடு முழுவதும் பாரிய வரிசைகள் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிக தேவை காரணமாக இன்று சில வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் நீங்கள் வாக்களிக்க வரிசையில் காத்திருந்து இரவு 7 மணி ஆகிவிட்டால், நீங்கள் வரிசையில் நின்று வாக்களிக்கலாம் என‌ தலைமைத் தேர்தல் அதிகாரி கார்ல் லீ கியூஸ்னே கூறினார்.

ஆக்லாந்தில், சில வாக்காளர்கள் சாவடிகள் திறக்கப்படுவதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பே வரிசையில் நின்றதாகக் கூறப்படுகிறது.

மேலும் Cambridge மற்றும் Kerikeri இல் உள்ள சில வாக்குச் சாவடிகளில் இன்று காலை வாக்காளர்களால் நிரம்பி வழிகிறது.

இதனிடையே வாக்காளர் பட்டியலின் மின்னணு பதிப்பில் தகவல் தொழில்நுட்ப சிக்கல்கள் இருந்தன, இருப்பினும், அது இப்போது சரி செய்யப்பட்டுள்ளது.

செய்தி நிருபர் - புகழ்