கடந்த சனிக்கிழமையன்று காசா பகுதியில் இருந்து தெற்கு இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் குழுவினர் வரலாறு காணாத தாக்குதல் நடத்தினர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேலியப் போர் விமானங்கள் மற்றொரு வான்வழித் தாக்குதலை நடத்தின. காசா மீது இஸ்ரேல் போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வருகின்றன.

இந்நிலையில் நியூசிலாந்தில் பிறந்த ஆண் ஒருவர் இஸ்ரேல் யுத்தத்தில் இறந்ததை நியூசிலாந்து யூத கவுன்சில் உறுதி செய்துள்ளது.

செய்தித் தொடர்பாளர் ஜூலியட் மோசஸ் கூறுகையில், ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேலை பாதுகாக்கும் பணியின் போது ஆடம் அக்மோன் கொல்லப்பட்டார்.

அக்மோன் இஸ்ரேலிய பெற்றோருக்கு நியூசிலாந்தில் பிறந்தவர் ஆவார், ஆனால் இளம் வயதிலேயே அவர் இஸ்ரேலுக்குத் திரும்பினார்.

இந்நிலையில் அவரது உடல் மிசிகாவில் உள்ள பிராந்திய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்