Porirua வில் உள்ள 7000க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

இன்று மதியத்திற்கு முன்னதாக டிரான்ஸ்பவரின் முக்கிய மின்சாரம் வழங்கும் இணைப்பு ஒன்றில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்டதாக‌‌ Wellington Electricity கூறியது.

இதனையடுத்து Pauatahanui, Plimmerton, Mana, Titahi Bay, Whitby மற்றும் வெலிங்டனுக்கு வடக்கே உள்ள பிற பகுதிகளில் உள்ள புறநகர்ப் பகுதிகளில் 7377 வீடுகளுக்கு மின் தடை ஏற்பட்டது.

இந்நிலையில் மதியம் 2 மணியளவில், மின்சாரம் சீரமைக்கப்பட்டதாக டிரான்ஸ்பவர் கூறியது.

மின்தடையின் போது மக்கள் பொறுமை காத்ததற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

செய்தி நிருபர் - புகழ்