இலங்கை

இலங்கையில் தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான காலநிலைக் காரணமாக மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த ஜூன் மற்றும் ஜுலை மாதங்களில் அதிகரித்திருந்த போதிலும் கடந்த சில வாரங்களில் அது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் பெய்து வரும் மழை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வருடம் இதுவரையில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் 65,000ஐ தாண்டியுள்ளதுடன், மேல் மாகாணத்தில் 31,000 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 700 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.