84 நாட்களுக்கு முன்பு காணாமல் போன Christchurch ரியல் எஸ்டேட் முகவரான யான்ஃபேய் பாவோவை காவல்துறையும் சிறப்புத் தேடல் குழுவும் தொடர்ந்து தேடுதல்களை நடத்தி வருகின்றன.

44 வயதான அவர் கடைசியாக ஜூலை 19 ஆம் திகதி அன்று Hornby இன் புறநகர்ப் பகுதியில் காணப்பட்டார்.

இதனையடுத்து Tinjun Cao‌ என்ற 52 வயதான நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு, அவரை கடத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை Christchurch இன் தெற்கே Hudsons சாலையில் உள்ள Motukarara மற்றும் Greenpark, Jarvis சாலை மற்றும் Te Waihora Lake Ellesmere கரையில் தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "திருமதி பாவோவை கண்டுபிடிப்பதில் பொலிஸார் உறுதியுடனும் உள்ளனர் என தெரிவித்தார்.

இந்நிலையில் தகவல் தெரிந்தவர்கள் யாரேனும் 105 இல் தொடர்பு கொள்ளுமாறு காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

செய்தி நிருபர் - புகழ்