Christchurch இல் உள்ள Mobil பெட்ரோல் நிலையத்தில் ஆயுதத்தைக் காட்டி மிரட்டி கொள்ளையில் ஈடுபட்ட நபரின் புகைப்படத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
காவல்துறையின் அறிக்கையின்படி, காலை 8.50 மணியளவில் Sydenham இல் உள்ள குறித்த பெட்ரோல் நிலையத்திற்குள் ஒருவர் நுழைந்தார்.
அவர் பணம் மற்றும் சிகரெட்டுகளை கோரி அங்கிருந்த உதவியாளரை ஆயுதத்தை காட்டி மிரட்டினார் என்று பொலீஸ் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
அந்த நபர் சம்பவ இடத்திலிருந்து ஒரு Milazo mountain bike இல் Milton தெருவில் மேற்கு நோக்கி தப்பிச் சென்றார்.
இந்த சம்பவத்தில்உதவியாளர் காயமடையவில்லை, ஆனால் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.
இந்நிலையில் குற்றவாளியை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோருகின்றனர்.
இன்று காலை 8.30 முதல் 10 மணிக்குள் Sydenham பகுதியில் ஒரு கருப்பு Milazo mountain bike ஐ கண்ட எவரும் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி நிருபர் - புகழ்