Ōpōtiki இல் நேற்றைய தினம் நபர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்ததை அடுத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று மாலை 4.40 மணியளவில் Ford தெருவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தாக்குதலில் காயமடைந்த நபர் மீட்கப்பட்டு Whakatāne மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை மாலை, Ōpōtiki இல் 44 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட நபர் இன்று Whakatāne மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என்றும், நேற்று மாலை 4.10 மணி முதல் 4.40 மணி வரை Ford தெருவில் அல்லது அதற்கு அருகில் இருந்தவர்கள் தாக்குதலை நேரில் பார்த்திருந்தால் 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
செய்தி நிருபர் - புகழ்