Breaking News

வெள்ளத்தில்  சேதமடைந்த வீட்டை சுத்தம் செய்ய உதவிய ஒடாகோ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர்...!!

வெள்ளத்தில்  சேதமடைந்த வீட்டை சுத்தம் செய்ய உதவிய ஒடாகோ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர்...!!

ஒடாகோ பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் Queenstown இற்கு சென்று அங்கு வெள்ளத்தில் கடுமையாக சேதமடைந்து சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஒரு வீட்டை சுத்தம் செய்ய உதவியுள்ளனர்.

Queenstown Lakes மாவட்ட கவுன்சில் நேற்று Reavers Lane இல் கட்டிட ஆய்வுகளை மேற்கொண்டது.

இதன்போது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 10 வீடுகளுக்கு சிவப்பு ஸ்டிக்கர் மற்றும் இரண்டு வீடுகளுக்கு மஞ்சள் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டது.

இந்நிலையில் Reavers Lane‌ இல் சிவப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட தனது அத்தையின் வீட்டை சுத்தம் செய்ய ஜாஸ்பர் தாம்சனுக்கு (மாணவர்) வெள்ளிக்கிழமை அழைப்பு வந்தது.

இதன்போது தனக்கு உதவுவதற்காக தனது தோழர்களையும் அழைத்ததாக அவர் கூறினார்.

இன்னும் இரண்டு நாட்கள் இங்கே இருப்போம் என்று நினைக்கிறேன்.

நாங்கள் வீட்டின் உள்ளே சேதமடைந்த அனைத்தையும் சுத்தம் செய்ய நினைத்தோம், ஆனால் எங்களால் அங்கு செல்ல முடியாது. ஏனென்றால் வீடு சிவப்பு-ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது, எனவே நாங்கள் வெளியே எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என்று தாம்சன் கூறினார்.

செய்தி நிருபர் - புகழ்