Breaking News

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்யும் தியாகிகாலுக்கி அரசு மரியாதை - முதல்வர் ஸ்டாலின்..!!

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்யும் தியாகிகாலுக்கி அரசு மரியாதை - முதல்வர் ஸ்டாலின்..!!

இந்தியா: தமிழ்நாடு

உடல் உறுப்பு தான திட்டத்தை கடந்த 2007-2008-ம் ஆண்டில் கருணாநிதியால் கொண்டு வரப்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் 13 மருத்துவமனைகளில் மட்டுமே உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய நிலை இருந்தது. ஆனால் தி.மு.க. ஆட்சி வந்த பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தானம் பெறக்கூடிய வகையில் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகள் தானமாக பெறப்படுகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகிலேயே உடல் உறுப்புகள் தானம் செய்வதில் தமிழகம் தான் முதல் இடத்தில் உள்ளது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்தார்.

இந்த நிலையில் உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாகத் தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகின்றது. குடும்ப உறுப்பினர்கள் மூளைச்சாவு நிலையை அடைந்த துயரச் சூழலிலும், அவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக அளித்திட முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால்தான் இந்தச் சாதனை சாத்தியமாகியுள்ளது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.