Upper Hutt இல் நேற்றைய தினம் ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை பிற்பகல் Akatarawa வீதியில் ஒருவர் காயமடைந்த நிலையில் உயிரிழந்ததை அடுத்து கொலை விசாரணை ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட 39 வயதுடைய பெண் இன்று Hutt Valley மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக வேறு யாரையும் தேடவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செய்தி நிருபர் - புகழ்