இலங்கை

சீன அரசாங்கத்தால் இலங்கைக்கு 10 ஆயிரம் ரயில் தண்டவாளங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றை பிரதான ரயில் மார்க்கத்தில் மஹவ முதல் கொழும்பு வரையிலான வளைவுகளுடன் கூடிய இடங்களில் பொருத்த திட்டமிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ரயில்வே பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.டி.எஸ். குணசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த பகுதிகளில் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படாவிட்டால், ரயில்கள் தடம்புரளும் சம்பவங்கள் பதிவாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.