North Island இன் சில பகுதிகளுக்கு கனமழை எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.
இதனிடையே Southland இல் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலை இப்போது நீக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்வர்கார்கில் முழுவதும் சில சாலைகள் மூடப்பட்டுள்ளன.
கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக கடந்த வியாழக்கிழமை Southland இல் அவசரநிலை அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் மேயர் நோபி கிளார்க் கூறுகையில், இப்பகுதியை சுத்தம் செய்வதற்கு சிறிது காலம் ஆகும்.
வெள்ளத்தால் சிலர் கணிசமான அளவு பாதிக்கப்பட்டுள்ளனர், இது துயரத்தை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வு என்றார்.
இரண்டு நாட்களாக பெய்த கனமழை மற்றும் வெள்ளத்திற்குப் பிறகு, மலையிலிருந்து வரும் மரக்கட்டைகள், வண்டல் மற்றும் ஜல்லிகளால் பாதிக்கப்பட்ட இரண்டு பகுதிகளில் கவுன்சிலின் துப்புரவு பணியாளர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
Gorge வீதிக்கு அருகில் உள்ள Reavers Lane இல் பத்து வீடுகளுக்கு சிவப்பு நிற ஸ்டிக்கர் மற்றும் இரண்டு வீடுகளுக்கு மஞ்சள் நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளன.
இந்நிலையில் Northland, Waitomo, Taumarunui, Taihape, Whanganui, மற்றும் Taupo மற்றும் Taranaki ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வரை கடும் மழை பெய்யக் கூடும் என MetService தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் - புகழ்