நடிகர் அஜித்தின் விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதத்தில் அவரது பிறந்தநாளையொட்டி வெளியானது. அது முதல் இந்தப் படத்தின் சூட்டிங் அப்டேட்டிற்காக ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். லைகா தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதியில் துபாயில் துவங்கவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

விடாமுயற்சி படத்தில் த்ரிஷா நடிக்க கமிட்டாகியுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்திருந்த ஹுமா குரோஷியும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத துவக்கத்தில் படத்தின் சூட்டிங் துபாயில் துவங்கவுள்ளதாகவும் ஒரே கட்டமாக படத்தின் சூட்டிங் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் இந்தப் படம் அடுத்த ஆண்டு கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தன்னுடைய பைக் டூரையொட்டி கடந்த சில வாரங்களாக வெளிநாட்டில் இருந்த அஜித், தற்போது சென்னை திரும்பியுள்ளார். இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடாமுயற்சி டீம் விரைவில் படத்தின் சூட்டிங்கிற்காக அபுதாபி செல்லவுள்ளதாகவும் அந்த ட்ரிப்பில் அஜித்துடன் இணையவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்னும் சில தினங்களில் இந்த டீம் தங்களுடைய வெளிநாட்டு பயணத்தை மேற்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் சூட்டிங் குறித்து லைகா அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.