மேற்கு ஆக்லாந்தில் உள்ள Piha கடற்கரையில் இன்று காலை நபர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நண்பகலுக்கு முன்னதாக இது குறித்து எச்சரிக்கை செய்யப்பட்டதாக செயின்ட் ஜான் ஆம்புலன்ஸ் சேவை கூறியது.

அவசரகால குழுவினர் அந்த நபரை உயிர்ப்பிக்க முயன்றனர், எனினும் அவரை உயிர்ப்பிக்க முடியவில்லை.

ஒரு ஹெலிகாப்டர் மற்றும் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்தில் இருந்தன.

மேலதிக விவரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

செய்தி நிருபர் - புகழ்