Southland மற்றும் Otago வில் கனமழை பரவலான வெள்ளம் மற்றும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வானிலை ஆய்வாளர் கிளேர் ஓ'கானர் கூறுகையில், Southland இல் மழை குறைந்து வருகிறது, ஆனால் கனமழை இப்போது West Coast ஐ தாக்குகிறது.
வாரயிறுதியில் North Island இல் கனமழை பெய்யும் என்று அவர் கூறுகிறார்.
இதற்கிடையில், South Island இல் கீழ் பாதியில் பனிப்பொழிவு தொடங்கியுள்ளது.
Tuatapere குடியிருப்பாளர்கள் தூய்மைப்படுத்தும் பணியை தொடங்கி உள்ளனர்.
கனமழை ஓய்ந்துவிட்டது, ஆனால் வெள்ளம், பெருகி வரும் ஆறுகள் மற்றும் குப்பைகள் காரணமாக இப்பகுதியில் பல சாலைகள் மூடப்பட்டுள்ளதாக Invercargill நகர சபை கூறுகிறது.
Queenstown இல் கடந்த 24 மணி நேரத்தில் 87 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது - 24 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்ததாக NIWA கூறுகிறது.
100க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Isle Street, Robins Road, Duke Street, Shotover Street மற்றும் Camp Street ஆகிய இடங்களில் முதற்கட்ட சுத்தப்படுத்தும் பணி நடந்து வருவதாக Queenstown Lakes மாவட்ட கவுன்சில் தெரிவித்துள்ளது.
செய்தி நிருபர் - புகழ்