Rotorua வில் வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செவ்வாய் கிழமை மதியம் 2 மணிக்கு முன்னதாக Malfroy சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு வாகனத்தில் இருந்த சிலர் மற்றொரு வாகனத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் 18 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு சட்டவிரோதமாக துப்பாக்கியை வைத்திருந்ததாகவும், மிரட்டும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

அவர் Rotorua மாவட்ட நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பறியும் சார்ஜென்ட் நாதன் மார்டன் கூறுகையில், இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

தகவல் தெரிந்தவர்கள், 105 என்ற எண்ணில் காவல்துறையை தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

செய்தி நிருபர் - புகழ்