இந்தியா: தமிழ்நாடு

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு ஆண்டுதோறும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டுக்கான நீட் நுழைவுத் தேர்வு குறித்த விவரங்கள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்யமாக இருந்தாலும் எம்.டி, எம்.எஸ். படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மருத்துவ கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் விடுத்துள்ள ட்விட்டர் (எக்ஸ்) பதிவில் கூறியுள்ளதாவது :

முதுநிலை நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் பூஜ்ஜியமாகக் குறைப்பதன் மூலம், தேசிய ‘தகுதி’ நுழைவுத் தேர்வு அர்த்தமற்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நீட் பயிற்சி நிறுவனங்களுக்கு பணம் கட்டுவது தான் ஒரே நோக்கம். அதனை தவிர வேறு எந்த தகுதியும் தேவையில்லை.

NEET = 0. NEET க்கும் தகுதிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இதை நாம் காலம் காலமாக சொல்லி வருகிறோம். இது வெறும் சம்பிரதாயமாக மாறிவிட்டது, உண்மையான தகுதிக்கான அளவுகோல்கள் எதுவும் இல்லை.

விலை மதிப்பற்ற பல உயிர்கள் பலியாகியும் மனம் தளராத ஒன்றிய பாஜக அரசு, தற்போது இப்படி ஒரு உத்தரவை கொண்டு வந்துள்ளது. #NEET மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்தியதற்காக பாஜக அரசை அகற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.