தெற்கு ஆக்லாந்தில் உள்ள இரண்டு வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேற்றைய தினம் இரவு 9.45 மணியளவில் Ōtara வில் உள்ள Tyrone தெருவில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதனால் வீட்டிற்குள் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் குற்றவாளி வாகனத்தில் தப்பியோடினார் எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து இன்று அதிகாலை 1.30 மணியளவில் Māngere இல் உள்ள Idlewild Avenue வில் ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.
முன்பக்க கதவு மற்றும் ஜன்னல்கள் மீது துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது, ஆனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இரண்டு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை கண்டறியும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
செய்தி நிருபர் - புகழ்
தெற்கு ஆக்லாந்தில் இரண்டு வீடுகள் மீது துப்பாக்கிச் சூடு - பொலிஸார் விசாரணை...!
