இயக்குநர் நெல்சன் இயக்கிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், நெல்சனுக்கு தரமான கம்பேக்காக அமைந்துள்ளது.
தலைவரின் ஃபேன் பாய் சம்பவமாக ஜெயிலர் படத்தை செதுக்கியுள்ளார் நெல்சன்.
கலவையான விமர்சனங்களுடன் பாக்ஸ் ஆபிஸிலும் 600 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது ஜெயிலர். இதனால், நெல்சனுக்கு பல முன்னணி ஹீரோக்களிடம் இருந்து ஆஃபர்கள் சென்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தற்போது டோலிவுட் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுனை நேரில் சந்தித்துள்ளாராம் நெல்சன்.
புஷ்பா 2ம் பாகத்தில் நடித்து வரும் அல்லு அர்ஜுன், தனது அடுத்தப் படத்திற்காக கதை கேட்டு வருகிறார். ஜவான் படத்தின் வெற்றியைப் பார்த்து மிரண்டு போன அல்லு அர்ஜுன், அடுத்து அட்லீயுடன் இணையவிருப்பதாக சொல்லப்பட்டது.
இதனிடையே தற்போது நெல்சனை சந்தித்து அவரிடம் கதை கேட்டுள்ளாராம். அதன்படி, நெல்சன் சொன்ன கதைக்கு அல்லு அர்ஜுனும் ஓக்கே சொல்லிவிட்டதாகத் தெரிகிறது. இதனால், விரைவில் நெல்சன் - அல்லு அர்ஜுன் கூட்டணி பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதும் உறுதி ஆகியுள்ளது. இன்னொருபக்கம் அட்லீ - அல்லு அர்ஜுன் கூட்டணி பற்றியும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அட்லீயை ஓவர்டேக் செய்த நெல்சன்; அல்லு அர்ஜுனுடன் புதிய கூட்டணி - அடுத்த சம்பவமா..?

உங்கள் விருப்பத்துக்குரிய மேலதிக செய்திகள்
Orb 360 Innovate, Evolve & Prosper
விளம்பரம்
விளம்பரம்
Orb 360 Innovate, Evolve & Prosper
விளம்பரம்
விளம்பரம்
Dunedin Multi-Ethnic Council
விளம்பரம்
விளம்பரம்