Breaking News

Pukaki Downs இல் பாரிய காட்டுத் தீ - கட்டுப்படுத்த போராடும் ஹெலிகாப்டர்கள்...!!

Pukaki Downs இல் பாரிய காட்டுத் தீ - கட்டுப்படுத்த போராடும் ஹெலிகாப்டர்கள்...!!

Twizel க்கு வடக்கே Pukaki Downs இல் ஏற்பட்ட பாரிய காட்டுத் தீ தொடர்ந்து பற்றி எரிந்து வருகிறது.

புதன்கிழமை இரவு 7.45 மணியளவில் இந்த தீ பரவல் ஏற்பட்டது.

இதனையடுத்து Twizel, Mt Cook, Omarama, Burkes Pass மற்றும் Lake Tekapo ஆகியவற்றிலிருந்து பதினொரு தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

சில குடியிருப்பாளர்கள் இரவோடு இரவாக அங்கிருந்து வெளியேறினர்.

இந்நிலையில் இன்று காலை முதல் Pukaki Downs இல் தீயை அணைக்கும் பணியில் ஏழு ஹெலிகாப்டர்கள் போராடி வருகின்றன.

Pūkāki வார்ட் கவுன்சிலர் ஸ்காட் அரோன்சன் கூறுகையில், புகாக்கி ஏரியின் ஓரத்தில் உள்ள பைன் மரங்களில் தீப்பிழம்புகள் பரவி வருகின்றன.

தீயை அணைப்பதை சிரமமாக்கிய பலத்த காற்று குறைந்து விட்டதாகவும், சமீபத்திய மணிநேரங்களில் தீ கொஞ்சம் கொஞ்சமாக தணிந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் இன்று பிற்பகலில் மீண்டும் காற்று வீசினால், தீ மேலும் பரவக்கூடும் என கூறப்படுகிறது.

செய்தி நிருபர் - புகழ்